புதுடில்லி: டில்லயில் உள்ள நேரு விளையாட்டுமைதானத்தை கொரோனா முகாமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தலைநகர் டில்லியில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக டில்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் நடைபெற்றது. மைதானம் அமைந்துள்ள தென் மேற்கு மாவட்ட கலெக்டர் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என விளையாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் தற்போதைக்கு மைதானத்தை பயன்படுத்தும் முடிவை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.